ஆளுமை:வலன்ரின், செபமாலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:19, 14 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= வலன்ரின்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வலன்ரின்
தந்தை செபமாலை
தாய் பாக்கியம்
பிறப்பு 1946.07.03
ஊர் இரணைமாதாநகர்
வகை கூத்துக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வலன்ரின், செபமாலை (1946.07.03 -) கிளிநொச்சி, இரணைமாதாநகரினை பிறப்பிடமாகக் கொண்ட கூத்துக்கலைஞர். இவரது தந்தை செபமாலை; தாய் பாக்கியம். ஆரம்பக் கல்வியை இரணைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியில் கற்றார். இவர் மருசலின் அண்ணாவியுடன் இணைந்து செயற்பட்டவர் அதற்கு உதாரணமாக மருசலின் அண்ணாவி பழக்கிய அருளப்பர் நாடகத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளமையை குறிப்பிடலாம். ஞானசவுந்தரி நாடகத்தில் ஆறு தடவைகள் புலேந்திரனுக்கு நடித்துள்ளார். அப்படியானால் இரணைதீவு மக்களுடைய வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்திருக்கும் பல நாடகங்களில் ஞானசவுந்தரி நாடகம் முதன்மை பெற்று இருப்பதை உணர முடிந்தது.

இவர் நாட்டுக்கூத்துகளில் மட்டும் ஊக்கம் உள்ள கலைஞராக இருக்கவில்லை மாறாக அந்த காலத்தில் மேடையேற்றப்பட்ட சகல சமூக நாடகங்களிலும் உற்சாகம் உள்ள கலைஞராகவும் தலைவராகவும் செயல்பட்டார். ஒரு துளி இரத்தம் ,ஞான ஒளி, தரகு வாத்தியார் ,கண்ணாடி வாத்தியார் ,கொடைவள்ளல் வாத்தியார் ,முச்சந்தி வாத்தியார், என்பன கலைஞர்கள் நினைவில் இருக்கும் சில நாடகங்கள். நாங்கள் ஒரு துளி இரத்தம் நாடகத்தினை தேவன்பிட்டியில் ஏற்றுவதற்கு முன்னணி கலைஞர்கள் இவர் பிரதானமானவர் மறக்க முடியாதவர் என்றார் அண்ணாவி செபஸ்டி சந்தியா அவர்கள்.