அங்க இப்ப என்ன நேரம்?

From நூலகம்
அங்க இப்ப என்ன நேரம்?
47.JPG
Noolaham No. 47
Author முத்துலிங்கம், அ.
Category அனுபவக் கட்டுரைகள்
Language தமிழ்
Publisher தமிழினி
Edition 2004
Pages 343

To Read

Book Description

கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் அ.முத்துலிங்கம், ஈழத்துத் தமிழ் இலக்கியக்களத்தில் சிறந்த சிறுகதையாசிரியராக மதிக்கப்படுபவர். அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி, ஆகிய தொகுதிகளும், அ.முத்துலிங்கம் கதைகள் என்ற பாரிய தொகுப்பும் இவரது கதைகளைக் கொண்டு வெளிவந்தவை. சிறுகதைகளுக்கு அப்பால் இவர் எழுதிய 48 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. சிறுகதை வாசிப்பில் கிடைத்த அதே விறுவிறுப்பும், சுவையும் இவர் எழுதும் கட்டுரைகளிலும் காணப்படுகின்றன. கனடாவில் வாழ்வியல் முறைகள், எதிர்பாராத சந்திப்புகள், ரசனை, பயணங்கள், கண்டதும் கேட்டதும், மொழிபெயர்ப்பு, விமர்சனம், அனுபவக்கதை, சிந்திப்பதற்கு என்று 9 பிரிவாகத் தன் கட்டுரைகளை வகைப்படுத்தி இத்தொகுதியில் வழங்கியுள்ளார்.


பதிப்பு விபரம் அங்கே இப்ப என்ன நேரம்? அ.முத்துலிங்கம். சென்னை 14: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (சென்னை: மணி ஆப்செட்). 343 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 22.5*15 சமீ, ISBN 81-87641-53-3.

-நூல் தேட்டம் (# 3737)