ஆளுமை:இராசமாணிக்கம், இராசைய்யா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசமாணிக்கம்)
தந்தை இராசைய்யா
தாய் சுவர்ணலதா
பிறப்பு 1975.08.11
இறப்பு -
ஊர் RV-4, தங்கநகர், சேருவில , திருகோணமலை
வகை தேன் வேட்டையர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசைய்யா இராசமாணிக்கம் (1975.08.11) இவர் RV-4, தங்கநகர் - சேருவில - திருகோணமலையைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த திறமையான தேன் வேட்டையர் ஆவார். இவரது தந்தை இராசைய்யா;தாய் தங்கம்மா. இவரது மனைவியின் பெயர் சுவர்ணலதா. இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது பாடசாலைக் கல்வியினை மூன்றாந்தரம் வரைக்கும் தங்கநகர் சம்பகவல்லி தமிழ் வித்தியாலயத்தில் கற்றுள்ளார். இவர் தனது பதினான்கு வயதில் இருந்து தேன்வேட்டைக்குச் செல்பவராகவும், தற்காலம் வரைக்கும் தேன் வேட்டைக்குச் செல்பவர்களுக்கான சகல வனப்பகுதிகளுக்குமான வழிகாட்டியாகவும் காணப்படுன்கிறார். அத்துடன் தமது சமூகத்தே காணப்படுகின்ற உத்தியாக்கள் (முன்னோர்) வழிபாடுகள் பற்றிய நடைமுறை விளக்கங்களினை அறிந்து கொண்டவராகவும், பிற மரண வீடுகளுக்குச் சென்று குறித்த சடங்கினை ஆற்றுப்படுத்துபவராகவும், பல்லாளுமை கொண்டவராகவும் காணப்படுகின்றார்.