ஆளுமை:இராசம்மா, சாந்தலிங்கம்

From நூலகம்
Name இராசம்மா
Pages சின்னையா
Pages அபிராமி
Birth 1927.04.04
Pages முள்ளியவளை
Place
Category மருத்துவர்

இராசம்மா, சாந்தலிங்கம் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையைச் சேர்ந்த நாட்டு வைத்தியராவார். இவரது தந்தை சின்னையா; தாய் அபிராமி. இராசம்மா சாந்தலிங்கம் அவர்களின் வைத்திய முறையானது திருகோணமலையிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். இவரது பரம்பரையே நாட்டு வைத்தியத்தை செய்து வருகிறார்கள் இவர் 12ஆவது தலைமுறையாக இந்த வைத்தியமுறை செய்து வருகிறார். இவரது தந்தை சின்னையா 1886ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் 1972ஆம் ஆண்டு இறந்த பின்னர் தந்தையாரிடமிருந்து கற்றுக்கொண்ட வைத்திய முறையை கடந்த 42 வருடங்களாக செய்து வருகிறார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சரளமாக கதைக்கக்கூடியவர் இராசம்மா.

விருதுகள்

2019ஆம் ஆண்டு மகளிர் தினத்தில் திறமையான பெண் உலகத்தை படைக்கிறாள் என்ற விருது.

2016ஆம் ஆண்டு சுதேச மருத்துவதிற்கு ஆற்றிய சேவைக்காக கரைத்துரைப்பற்று கலாசார பேரவையால் முல்லைபேரொளி விருது.

யாழ் உடுவில் குபேரகா கலா மன்றம் வடக்கின் சாதனைப் பெண்கள்2019ஆம் ஆண்டு சித்த மருத்துவத்தைப் பாராட்டி வடஜோதி எனும் உயரிய விருது.