ஆளுமை:இராசயோகன், இராசவல்லவன்

From நூலகம்
Name இராசயோகன்
Pages இராசவல்லவன்
Pages யோகமலர்
Birth 1945.10.17
Place மானிப்பாய்
Category நாடகக்கலைஞர்


இராசயோகன், இராசவல்லவன் (1945.10.17 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராசவல்லவன்; தாய் யோகமலர். தனது ஆரம்பக்கல்வியை மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கற்ற இவர், மானிப்பாய் தெற்கில் கிராமசேவை அலுவலராகப் பணியாற்றியுள்ளார்.

1999 ஆம் ஆண்டு தை மாதம் வெளிவந்த ‘இறைத்தூதன்’ வார இதழில் இவரது முதலாவது ஆக்கமான ‘கருநாகமும் சோலைக் குயிலும்’ என்ற கதை வெளியானது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் கதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். சிந்தனை செய் மனமே, ஆசையினாலே மனமே போன்றன இவரது சிறுவர் நூல்களாகும். மேலும் 1994 ஆம் ஆண்டில் தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு அரங்கேற்றப்பட்ட ‘அவன் தாறான்’ என்னும் நாடகத்தில் கதாநாயகியாக நடித்த இவர், இதனைத் தொடர்ந்து சுமார் 10 நாடகங்கள் அளவில் நடித்துள்ளார். 2006 இல் வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாச்சார விழாவில் கலைஞாயிறு என்னும் விருது பெற்றார்.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 94-97
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 02