ஆளுமை:இராஜேஸ்வரி, சிறிதரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜேஸ்வரி
தந்தை ஆறுமுகம்
தாய் சரஸ்வதி
பிறப்பு 1967.06.24
ஊர் முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பாலிநகர்
வகை கலைஞர்


இராஜேஸ்வரி, சிறிதரன் (1967.06.24) முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தைகிழக்கு பாலிநகரில் பிறந்த இசைக் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம், தாய் சரஸ்வதி. முல்லைத்தீவு மாவட்டம் பாலிநகர் மகாவித்தியாலத்தில் கல்விகற்றார். ஆசிரியாக வரவேண்டும் என்பதே இவரது கனவாக இருந்தது.

சிறு வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இவர் கணவனின் உதவியுடன் சுய உற்பத்திக்குழுவுடன் இணைந்து பெண்களுக்கு உதவியுள்ளார் . இக்குழுவானது படிப்படியாக கொத்தணியாக மாறி பின்னர் மாவட்ட சம்மேளனமானது. 2005ஆம் ஆண்டு முல்லை மாவட்டத்தில் 3000 பெண்களைக் கொண்ட சம்மேளனத்தில் உறுப்பினராக இணைந்துகொண்ட இவர் 2011ஆம் ஆண்டு அதன் தலைவராகச் செயற்பட்டுள்ளார். பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுத்தல், சம்மேளனத்திற்குரிய சட்டம் வரைபை வரைதல், பெண்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள், உரிமை சட்டம், பால்நிலை சமத்துவம் பயிற்சி பட்டறைகளை என்பவற்றை வழங்கி வருகிறார்.

கிராமத்தின் மாதர் சங்கத்தின் செயலாளராகவும் சமூர்த்தி சங்கத்தின் தலைவராகவும், மகளிர் கமக்கார அமைப்பின் உறுப்பினராகவும் இருந்துவருவதோடு SLCDF, World Vision கிறிசலிஸ் போன்ற பல அமைப்புக்களுடன் இணைந்தும் செயற்பட்டு வருவதோடு இந்நிறுவனங்களின் இலக்குகளினை நிறைவேற்றுவதற்கும் உதவுகிறார்.

2018 ஆம் ஆண்டு World Vision நிறுவனத்தின் திட்டத்தினூடாக நலிவுற்றபெண்கள், மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்டு சமூகமாற்றம், மாற்றத்திற்கான பயணம், மாற்றத்திற்கான சேமிப்பு போன்ற திட்டங்களின் இலகுபடுத்துனராக இருந்து பால்நிலை சமத்துவத்துவத்தை உருவாக்கி பெண்களுக்கெதிரான வன்முறையைக்குறைப்பதற்காக பாடுபடுகின்றார். 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண் வேட்பாளராக போட்டியிட்டு மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்து வருகிறார். தற்போது முல்லைமாவட்ட உள்ளுராட்சி மன்றப் பெண் உறுப்பினர்களின் தலைவியாகச் செயற்பட்டுவருகின்றார்.

குறிப்பு : மேற்படி பதிவு இராஜேஸ்வரி, சிறிதரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.