ஆளுமை:இர்பானா, ஜப்பார்'''

From நூலகம்
Name இர்பானா
Pages ஸெய்ன் அலி
Pages ஸித்தி கலிமா
Birth 1968.09.21
Place காலி
Category எழுத்தாளர்

இர்பானா, ஜப்பார் (1968.09.21) காலியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஸெய்ன் அலி; தாய் ஸித்தி கலிமா. ஆரம்பக்கல்வியை தர்கா நகர் அல் ஹம்றா மகா வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர் கல்வியை களுத்துறை அளுத்கம வீதி முஸ்லிம் தேசிய மகளிர் கல்லூரியிலும் கற்றார். பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். எட்டாம் வகுப்பு படிக்கும் போது இவர் எழுதிய முதலாவது சிறுகதை வசந்தம் வந்த போது எனும் தலைப்பில் தினகரன் பத்திரிகையில் வெளிந்துள்ளது. இதுவே இவர் எழுத்தாளராக தன்னை அடையாளப்படுத்தக் காரணமாக அமைந்தது. இவரின் ஆக்கங்கள் கதை, கவிதை, கட்டுரை தினகரன், சிந்தாமணி, தினபதி ஆகிய நாளிதழ்களிலும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையிலும் வெளிவந்துள்ளது. துணிவின் எல்லை என்னும் நாவலும், புதுமைப்பெண் எனும் சிறுகதைத் தொகுப்பும் 1992ஆம் ஆண்டு கல்ஹின்ன தமிழ் மன்றத்தினால் வெளியிடப்பட்டது. இவர் சிறுகதைகள் போட்டிகளில் கலந்துகொண்டு முதலாமிடத்தையும் பெற்றுள்ளார். எழுத்துத்துறைக்கு பெரும் பங்களிப்பு செய்து வந்த எழுத்தாளர் இர்பானாவின் பேனாமுனை தற்பொழுது அவரின் உடல்நலன் காரணமாக ஒய்வெடுத்துள்ளது.

Resources

  • நூலக எண்: 580 பக்கங்கள் 14