ஆளுமை:உதயகுமார், தங்கராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உதயகுமார்)
தந்தை தங்கராசா
தாய் தெய்வானை
பிறப்பு 1974.06.10
இறப்பு -
ஊர் பால்ச்சேனை, கதிரவெளி, மட்டக்களப்பு
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கராசா உதயகுமார் (1974.06.10) இவர் பால்ச்சேனை, கதிரவெளி, மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த பாடசாலை அதிபராவார். இவரது தந்தை தங்கராசா;தாய் தெய்வானை. இவரது மனைவியின் பெயர் சந்திராதேவி. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. இவர் தனது ஆரம்பக்கல்வியினை தரம் ஐந்து வரைக்கும் பால்ச்சேனை அரச தமிழ்க்கலவன் பாடசாலையில் கற்றுள்ளார். பின்னர் உயர்தரம் வரைக்கும் கதிரவெளி தமிழ் வித்தியாலயத்தில் கற்றுள்ளார். தொடர்ந்து அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பயற்றப்பட்ட ஆசிரியராகப் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் இளங்கலைமாணி மற்றும் முதுகலைமாணி பட்டங்களினை வெளிவாரியாகப் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து PGD,PGDM ஆகிய கற்கை நெறிகளினையும் பூர்த்தி செய்துள்ளார். இவர் முதலாவதாக மட்/ கட்டுமுறிவு வித்தியாலயத்தின் ஆசிரிய சேவையில் இணைந்துள்ளார். கடந்த இருபத்திமூன்று வருடங்களாக ஆசிரியர் சேவையில் இருக்கும் இவர், தற்பொழுது தான் ஆரம்பக்கல்வியைப் பயின்ற அதே பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றுகிறார். அத்துடன் தனது கிராமத்தில் காணப்படுகின்ற வேடர் தொல் வழிபாடான பெரியதெய்வம் வழிபாட்டு மையத்தின் தலமை நிர்வாகியாகவும் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதே.