ஆளுமை:கணபதிப்பிள்ளை, நாகராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகராஜா கணபதிப்பிள்ளை
தந்தை நாகராஜா
தாய் சின்னம்மா
பிறப்பு 1931.11.08
இறப்பு 2013.11.11
ஊர் திருக்கோணமலை
வகை புகைப்படக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இவர் திருக்கோணமலையின் ஆன்மிக செயற்பாடுகளில் ஆர்வத்துடன் காணப்பட்ட ஒரு புகைப்படக் கலைஞர் என்பதுடன், ஒரு வரலாற்று ஆவணப்படுத்தல் ஆளரும் ஆவார்.

திருக்கோணமலை நகரில் நாகராஜா, சின்னம்மா தம்பதியினருக்கு 1931.11.08 ஆந் திகதி பிறந்த இவர் தனது கல்வியை மெதடிஸ்த பாடசாலையிலும், இந்துக்கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார். பின்னர் வனபரிபாலன திணைக்கள அலுவலகத்தில் பிரதம லிகிதராகக் கடமையாற்றினார்.

இளவயதிலேயே ஆத்மீகத்திலும், ஒளிப்படம் எடுப்பதிலும் காணப்பட்டார். திருக்கோணமலை மாவட்டமெங்கும் ஆலய தரிசனம் செய்து தன்னுடைய ஒளிப்பட நாட்டமுடையவராகக் கருவி மூலம் படங்களை பிரதி செய்து அவற்றை ஆவணங்களாகப் பணிப் பாதுகாத்தார். திருக்கோணேஸ்வரம், வில்லூன்றி கந்தகவாமி கோயில் திருமலை நகர பத்திரகாளியம்மன் கோயில், சனீஸ்வரன் கோயில், விஸ்வநாதசிவன் கோயில், சம்பூர் பத்திகாளி கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், வீரகத்திப்பிள்ளையார் கோயில், வெருகல் சித்திரவேலாயுதசுவாமி கோயில், திருக்கரைசையம்பதி, திருமங்கலாய் சிவன் கோயில், கன்னியா சிவன்கோயில் போன்ற இடங்களின் தோற்றம், சூழல், மூலமூர்த்திகளின் தோற்றங்கள், உற்சவகால நிகழ்வுகள் போன்றவற்றை ஒளிப்படப் பிரதிகளாகப் பாதுகாத்து வந்துள்ளமையை அறியக்கூயதாக உள்ளது.

இவருடைய ஒளிப்படங்கள் பல நூல்களின் முன்னட்டைகளாகவும், கோயில் கும்பாபிசேக மலர்களின் உட்பக்கங்களாகவும் அலங்கரித்துள்ளதை இன்றும் நாம் காணலாம். குறிப்பாக கிறிஸ்தவர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்றோர்களினால் அழித்து சிதைக்கப்பட்ட திருக்கோணேஸ்வர ஆலயத்தின் கலைப் பொக்கிசங்களான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கருங்கல் விமானப்பாகங்கள், கருங்கற் கதவுகள், தூண்கள் என ஒளிப்படபிரதிகளாக ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ளார்.

திருகோணமலையில் எங்கு சைவசமய நிகழ்வுகள் நடைபெற்றாலும் அங்கு இவரைக் காணலாம் என பெரியோர்கள் கூறுவதிலிருந்து இவருடைய இறைபக்தியை நாம் உணரமுடிகின்றது. மாதாஜியின் பணிகளில் அவரோடு இணைந்து சிவானந்த தபோவனத்தின் வளர்ச்சியிலும், சுவாமி தந்திரதேவா அவர்களோடு இணைந்து ஆத்மீக சமூக இறைபணித் தொண்டுகளிலும், சுவாமி கெங்காதரானந்தாவின் மேல் பக்தி கொண்டு சிவயோக சமாஜ செயற்பாடுகளிலும், திருக்கோணேஸ்வரப் பெருமானுடைய தொண்டுகளிலும் தன்னை முழு மனதோடு ஈடுபடுத்தி கொண்டார்.

மிக முக்கியமான வரலாற்று ஆவணக் காப்பாளர்களில் ஒருவராகவும், கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள் 2013.11.11 அன்று இறைவன் அடி சேர்ந்தார்.