ஆளுமை:கந்தசாமி, அடைக்கலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தசாமி
தந்தை அடைக்கலம்
தாய் குமாரிப்பிள்ளை
பிறப்பு 1958.01.20
ஊர் சாலையூர்- பாட்டாளிபுரம் - மூதூர் - திருகோணமலை
வகை இசைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அடைக்கலம் கந்தசாமி (1958.01.20) இவர் சாலையூர்- பாட்டாள்ளிபுரம் - மூதூர் - திருகோணமலையைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த திறமையான பன்முகக் கலைஞர் ஆவார். இவரது தந்தை அடைக்கலம்; தாய் குமாரிப்பிள்ளை. இவரது மனைவியின் பெயர் தங்கமுத்து. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது பாடசாலைக் கல்வியினை நான்கு வகுப்பு வரைக்கும் சேனையூர் மகா வித்தியாலயத்தில் கற்றுள்ளார். இவர் தற்காலத்தில் காணப்படுகின்ற பூர்வகுடிகள் சமூகத்தின் இசைக்கலைஞராகவும், குவேனி பழங்குடி அமைப்பின் உறுப்பினராகவும், பன்முக ஆளுமை கொண்டவராகவும் காணப்படுகின்றார். இவரின் இசைத்திறமையைப் பாராட்டி பல உள்ளூர் அமைப்புக்கள் இவரை கௌரவித்து உள்ளன. அவ்வகையில் பிரதேச மட்ட, மாகாண மட்ட , தேசிய மட்ட ரீதியாகவும் இவர் பல பதக்கங்களினைப் பெற்றுள்ளார். அத்துடன் இவரொரு கூத்துக்கலைஞரும் ஆவார். அவரது காலத்தில் வேடர் சமூகத்தினரிடையே காணப்பட்ட கலையாற்றுகைகளில் பங்கு கொண்ட அனுபவமும் உடையவர்.