ஆளுமை:கந்தப்பு, முருகேசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தப்பு
தந்தை முருகேசு
பிறப்பு 1926.06.18
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தப்பு, முருகேசு (1926.06.18 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முருகேசு. இவர் மன்னவர் என்ற புனைபெயரால் அறியப்பட்டார். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி பயின்ற இவர், தென் புலோலியூர் கந்தமுருகேசனிடம் கல்வி பயின்றார்.

1960 - 1972 வரையான காலப்பகுதிகளில் வானொலி மூலம் கலையுலகில் அறிமுகமான இவர், பண்டிதர் வீரகத்தியுடன் இணைந்து வாணி கலைக்கழகத்தை நிறுவி வகுப்புக்களை நடத்தி வந்துள்ளார். மேலும் வடமராட்சி கம்பன் கழக அமைப்பாளராகத் தொழிற்பட்டதுடன் கம்பன் விழாவையும் நடத்தினார். வடமாராட்சி தெற்கு- மேற்கு கலாச்சாரப் பேரவையின் உருவாக்கத்திற்குப் பங்களித்து அதன் உபதலைவராகவும் கடமையாற்றி, வடமாராட்சி தெற்கு- மேற்குப் பிரதேச கீதத்தினையும் இயற்றியுள்ளார்.

இவரது திறமையைப் பாராட்டி இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சு 2001 ஆம் ஆண்டு கலைஞானகேசரி என்ற விருதளித்து இவரைக் கௌரவித்ததோடு, வடமாராட்சி தெற்கு- மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையும் தமது வருடாந்த கலாச்சார விழாவின் ஒருநாள் நிகழ்விற்கான அரங்கிற்கு இவரது பெயரைச் சூட்டிக் கௌரவப்படுத்தியுள்ளது.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 07
  • நூலக எண்: 11851 பக்கங்கள் 31-34