ஆளுமை:கனகரத்தினம், பேரம்பலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரம்பலம் கனகரத்தினம்
தந்தை பேரம்பலம்
தாய் பூரணம்
பிறப்பு 1945.05.17
இறப்பு -
ஊர் திருக்கோணமலை
வகை இலக்கிய ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருக்கோணமலையை சேர்ந்த புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகள் முக்கியமான ஒருவர் "ஷெல்லிதாசன்" என அழைக்கப்படும் பேரம்பலம் கனகரத்தினம் ஆவார். இவர் 1945 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் வண்ணார்பண்ணையை ஒட்டியுள்ள "கலையாளி" என அழைக்கப்படும் ஒரு கிராமத்தில் பேரம்பலம், பூரணம் தம்பதியினருக்கு எட்டு பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார்.

இவர் தனது சிறு வயது ஆரம்பக் கல்வியை மெலடிஸ்த மிஷன் பாடசாலையில் கற்றார். பின்னர் இடைநிலை கல்வியை திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரியில் தொடர்ந்தார். அதன் பின்னர் உயர்கல்வியை யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரியில் வர்த்தகம் முகாமைத்துவ பிரிவில் பயின்று சித்தி அடைந்தார்.

இவர் தனது தொழில்நுட்ப கல்லூரி கற்கை காலப் பகுதியில் இலக்கியம் தொடர்பான ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டதுடன், "கன்னி" என அழைக்கப்படும் குறித்த தொழில்நுட்ப கல்லூரி மாதாந்த இதழில் ஆசிரியராகவும் செயற்பட்டார். இவர் தனது சிறுவயதில் ஒரு பிராமண குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்த கால பகுதியில் அவர்களிடம் இருந்து வாசிப்பு மற்றும் இலக்கியம் தொடர்பான ஆர்வத்தை பெற்றுக் கொண்டார்.

1974களில் யாழ்ப்பாணத்தில் இருந்து தொழில் நிமித்தம் திருக்கோணமலைக்கு வருகை தந்தார். திருக்கோணமலை நீர்பாசன செயற்திட்டங்களில் குரங்குபாஞ்சான் குள பகுதியில் பணியாற்றியதுடன், அதனைத் தொடர்ந்து தம்பலகாமம், கிண்ணியா போன்ற பகுதிகளிலும் பணியாற்றினார். இவரது தொழில் வாழ்க்கை காலத்தில் இலக்கிய வாழ்வு சற்று மந்தமாகவே காணப்பட்டது. எனினும் இவரது ஓய்வுக்கு பின்னர் மீண்டும் இலக்கியவாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் அம்மாவுக்கு பிடித்த கனி, செம்மாதுளம் பூ, நகர வீதிகளில் நதிப் பிரவாகம், பல்கலைச் செல்வி இராஜம் புஷ்பவனம் படைப்புகள், எங்களில் ஒருத்தி, வண்ண வண்ணப் பூக்கள் போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். தனது இலக்கிய வாழ்வியலில் பல விருதுகளை பெற்றுள்ளதுடன், சாகித்திய விருதையும் பெற்றுள்ளார்.

இவரது இலக்கிய வாழ்வில் மிகச்சிறந்த நண்பராக இவருடன் பயணித்ததில் முக்கியமானவர், நந்தினி சேவியர் ஆவார். இவர் ஒரு இடதுசாரி கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்த ஒருவராவார். தனது ஆரம்பகாலம் முதல் இடதுசாரி கொள்கைகளை நேசித்ததுடன், அதற்கு ஏற்றாற் போல் தனது வாழ்வியலையும் அமைத்துக் கொண்டார்.

இன்றைய காலகட்டத்தில் திருக்கோணமலையில் இலக்கியம் சார் நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் மூத்த இலக்கியவாதிகளுள் ஒருவராக இவர் திகழ்ந்து வருகின்றார்.