ஆளுமை:கறுப்பையா, மந்தையன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கறுப்பையா
தந்தை மந்தையன்
தாய் பெரமாயி
பிறப்பு 1941.07.20
ஊர் மாசார்
வகை புல்லாங்குழல் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மந்தையன் கறுப்பையா இவர் நுவரெலியாவில்(1941) பிறந்தார். புசல்லாவ வவாப்பிட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். தந்தையாரின் தொழில் காரணமாக வேறு இடங்களுக்கு மாறி மாறி சென்றதால் கல்வியைத்தொடர முடியவில்லை. கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பளைப்பகுதியில் வசித்து வருகின்றார். 1985 ஆம் ஆண்டிலிருந்து பளை கலை பண்பாட்டுக் கழகத்துடன் இணைந்து சேவையாற்றி வருகின்றார்.

இவரது கலை ஆர்வம் 14 ஆவது வயதில் தொடங்கியது. இவரது இசையின் வழிகாட்டி அமரர் வணக்கத்துக்குரிய நாதஸ்வர வித்துவான் வடிவேல் எனும் ஆசிரியராவார். இவர் பல வருடமாக செம்முகம் ஆற்றுகைக் குழுவுடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றார். ஓவியம் வரைதலிலும் ஆர்வமுள்ளவர். இத்தாவில் பாடசாலையில் ஓவியங்கள் வரைந்துள்ளார். இவரது புல்லாங்குழல் வாசிப்பினை தெய்வீகப்பாடல்களுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும், நாடக நிகழ்வுகளுக்கும், மற்றும் கோவில்கள், கிராமங்களில் நடைபெறும் மங்களகரமான நிகழ்வுகளுக்கும் நடாத்தி வருகின்றார். புல்லாங்குழல் வாசித்து வருகின்றார். அத்துடன் கிராமத்திலுள்ள மாணவர்களுக்கு புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொடுத்தும் வருகின்றார்.

இவரது இசையின் பயனாக 2016 ஆம் ஆண்டில் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழாவில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் “முதலமைச்சர் விருது", 2017 ஆம் ஆண்டு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார விழாவில் “கலைத்தென்றல் விருது", 2018 ஆம் ஆண்டு மாவட்ட பண்பாட்டு விழாவில் மாவட்டச் செயலகத்தின் “கலைக்கிளி விருது" ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் 2019 ஆம் ஆண்டில் கொழும்பு தாமரைத்தடாக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் “கலாபூஷண விருது" விருது வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில் பிரதேச இலக்கிய விழாவில் பாடல் ஆக்கப்போட்டியில் 3 ஆம் இடத்தைப்பெற்றமைக்காக சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.