ஆளுமை:சந்தியாப்பிள்ளை,கபிரியேல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்தியாப்பிள்ளை
தந்தை கபிரியேல்
பிறப்பு 1943.10.14
ஊர் நாச்சிக்குடா
வகை கூத்துக்கலைஞர்,அண்ணாவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சந்தியாப்பிள்ளை,கபிரியேல் (1943.10.14 - ) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட கூத்துக்கலைஞர்.இவரது தந்தை கபிரியேல். இவர் சிறு வயது முதல் கண்டியரசன் , ஞானசவுந்தரி முதலான பல நாடகங்களில் நடித்து வந்துள்ளார். இந்த அனுபவத்தால் 1973 ஆம் ஆண்டு பாலசூரன் எனும் நாட்டுக் கூத்தினை தனது தாயார் ஊரான நெடுந்தீவில், அங்குள்ள கலைஞர்களை கொண்டு பழக்கி அரங்கேற்றினார். இவரது புனைப்பெயர் ராசு ஆகும்.

1974 ஆம் ஆண்டு நொண்ட நாடகத்தை பழக்கி நாச்சிக்குடா யாகப்பர் திருவிழாவிற்கு மேடையேற்றினார். இவரின் கூத்து நடிப்பினால் கவரப்பட்ட மக்கள் மறுபடியும் அவரை அழைத்து 1983 இல் பாலசூரன் நாடகத்தினை பழக்கி மேடையேற்றினர். இவர் தனது மேடையேற்றங்களில் அவரது மகனான பத்திநாதன் அவர்களுக்கு முக்கிய கதாபாத்திரங்களை வழங்காது, அதாவது அரசன், சேனாதிபதி போன்ற முக்கிய பாத்திரங்களை வழங்கிப் பெருமை சேர்த்து கொள்வதை விட படிப்படியான பாத்திர வளர்ச்சியில் நகர்த்தி சென்றுள்ளமையை அறியமுடிகின்றது. உதாரணமாக 1974 ஆம் ஆண்டு ஜாகப்பர் திருவிழாவிற்காக நெறியாள்கை செய்த நொண்டி நாடகத்தில் இடையன் பாத்திரத்தினை வழங்கியுள்ளார். பின்னர் 1983-ம் ஆண்டு பழக்கிய பாலசூரன் நாடகத்திலே அரசன் பாத்திரம் கொடுத்துள்ளார்.

தான் அண்ணாவி என்ற முறையில் தனது மகனுக்கு முதல் அரங்கேற்ற திலேயே உயர் பாத்திரமான அரசின் பாத்திரத்தை கொடுத்து தனக்கும் தன் குடும்பத்திற்கும் பெருமையினையும் பாராட்டுகளையும் பெற்றிருக்க முடியும், ஆனால் கலைஞனாக உருவாக்கும் தூரநோக்கு கொண்டவராய் ஒரு படிமுறை வளர்ச்சியில் இடையன் பாத்திரத்துடன் ஆரம்பித்து அரசன் பாத்திரமேற்று நடித்தமையால் உருவாகும் அனுபவங்களையும் பாத்திரங்களின் தனித்துவத்தையும் கற்றுக் கொள்ளும் விதத்துடன் சேர்ந்து ஒரு நகர்த்தலை செய்துள்ளமைஇக்கலைக்கு இவர் கொடுத்த முதன்மையும் பெருமையும் என எண்ணத் தோன்றுகின்றது. கலை உலகிற்கு ஒரு சிறப்பான கலைஞனாக தன் வழியில் மகன் சந்தியாம்பிள்ளை பத்திநாதன் அவர்களை உருவாக்கிய மன நிறைவில் 1987 ஆம் ஆண்டு கலையுலகில் இருந்து உயிர் பிரிந்தது.