ஆளுமை:ஜேக்கப், வஸ்தியாம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜேக்கப்
தந்தை வஸ்தியாம்பிள்ளை
பிறப்பு 1939.12.07
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜேக்கப், வஸ்தியாம்பிள்ளை (1939.12.07 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வஸ்தியாம்பிள்ளை. இவர் 1953 இலிருந்து 46 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுக் கூத்துக் கலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் 35 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களிலும் நாடகங்களிலும் ஏழு இசை நாடகங்களிலும் நடித்துள்ளார். பதினேழு நாட்டுக்கூத்து மற்றும் நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளார். இவர் இலங்கை வானொலி, ரூபவாகினியின் பல்கலை அரங்குகளிலும் தன் கலைச்சிறப்பினை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளதுடன் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தில் நாட்டுக்கூத்திற்கான நிரந்தர மிருதங்க வித்துவானாகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் 1978 இல் தேசிய கலை வேந்தன், 1979 இல் கலைப்பொக்கிஷம், 1981 இல் சிம்மைக் குரலோன், 1988 இல் கலைக்குரிசில், 1992 இல் நாடகமாமன்னர், எழிலிசை மன்னன், 2001 இல் கலைஞானகேசரி, 2002 இல் யாழ்ரத்னா ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 216