ஆளுமை:ஞானராசா, சுகிலா

From நூலகம்
Name சுகிலா
Pages துரைராசா
Pages ஞானேஸ்வரி
Birth 1963.04.01
Place மட்டக்களப்பு
Category சிறுவர் இலக்கியவாதி

ஞானராசா, சுகிலா (1963.04.01) மட்டக்களப்பு வாழைச்சேனையில் பிறந்தவர் எழுத்தாளர். இவரது தந்தை துரைராசா; தாய் ஞானேஸ்வரி. எழுத்தாளர் சுகிலாவின் கணவர் ஞானராசாவும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கல்வியை ஓட்டமாவடி மகாவித்தியாலயத்திலும் இடைநிலை கல்வியை வாழைச்சேனை மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை திருகோணமலை ஸ்ரீ சண்முகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். தேசிய கல்வி நிறுவனத்தில் கல்விமாணி பட்டம் பெற்றுள்ளார். 1988ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலில் காலடி எடுத்து வைத்து 2009ஆம் ஆண்டு அதிபராக பதவி உயர்வு பெற்றார். வில்லூண்டி சனசமூக நிலைய தலைவராகவும் உள்ளார். எழுத்தாளர் தனது 16ஆவது வயதில் எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். இவரின் சிறுவர் இலக்கிய நூலான சின்னச்சிட்டுக்குருவி கல்வி அமைச்சின் இலங்கை தேசிய நூலக அபிவிருத்தி சபையினால் 2010ஆம் ஆண்டு சான்றிதழுக்கு உரியதாக தெரிவு செய்யப்பட்டு பாடசாலை நூலக புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இளைஞர், முதியோர் ஆகியோருக்கு பொருந்தக்கூடிய படைப்புக்களை படைக்க எண்ணியுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு ஞானராசா, சுகிலா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

  • சின்னச்சிட்டுக்குருவி

Resources

  • நூலக எண்: 15521 பக்கங்கள் 04-10