ஆளுமை:யசோதை, செல்வக்குமாரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யசோதை
பிறப்பு
ஊர்
வகை கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யசோதை, செல்வக்குமாரன் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பெண் ஆளுமை. இவர் உலகின் சிறந்த ஆசிரியர் 2019 (Global Teacher Prize 2019) க்கான பரிசை பெற்றுள்ளார். Varkey Foundation https://www.globalteacherprize.org என்ற அமைப்பின் வழியாக இந்த உலகின் தலை சிறந்த ஆசிரியருக்கான பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் உலகின் தலை சிறந்த ஆசிரியர் என்ற ரீதியில் முதல் 50 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை 179 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளிலிருந்து முதல் பத்துப் பேரில் ஒருவராக யசோதை செல்வகுமாரன் தெரிவாகியுள்ளார். இதேவேளை அவுஸ்திரேலியாவின் Commonwealth Award ஐயும் யசோதை பெற்றுள்ளார். யசோதா அவுஸ்திரேலியாவில் மேற்கு சிட்னியில் உள்ள ரூட்டில் ஹில் உயர்நிலைக் கல்லூரியில் (Rooty Hill High School) வரலாறு, சமூகமும் கலாசாரமும், புவியியல் பாடங்கள் கற்பித்து வருகிறார். இக்கல்லூரியில் அகதிகளும் புலம்பெயர்ந்த மாணவர்களும் 80 சதவீதம் கற்கின்றனர். அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள், பழங்குடியினரின் சமத்துவமான கல்விக்காக போராடி வரும் அதேவேளை கல்வியை இவரின் தனிப்பட்ட செயற்றிட்டங்களின் ஊடாக போதித்து வருகிறார்.

வெளி இணைப்புக்கள்