நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு மூத்தநயினார்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு மூத்தநயினார்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 4ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்குடுதீவு மூத்தநயினார்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.


புங்குடுதீவிலே இன்றுள்ள சைவ ஆலயங்களிலே காலத்தால் முந்திய திருக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும். 1890ஆம் ஆண்டிலே அரச ஆதரவிலே பதிவு செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட இந்துக் கோவில்கள் பற்றிய பதிவேட்டின் படி இவ்வாலயம் 1820ஆம் ஆண்டு நிறுவப்படதென அறிய முடிகின்றது. இதனை நிறுவியர் நாகப்பர் வயிரவநாதர் எனவும் மனேச்சர் அருணாசலம் நாகப்பர் எனவும் கூறப்படுகின்றது. இவ்வாலயம் மண்சுவர் கொண்டிருந்ததாகவும் 1820ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ஆம் திகதி கும்பாபிஷேகம் நடைப்பெற்றதாகவும் வரலாறு கூறுகின்றது. இனங்காத்த முதலியார் என்பவருக்குரிய நிலத்திலே இது நிறுவப்பட்டதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 109-111