பகுப்பு:உயிர்நிழல்

From நூலகம்

'உயிர் நிழல்' இதழ் பிரான்சிலிருந்து வெளிவருகின்ற இருமாத இதழ். வெளியீடு 1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஓரளவு காலத்தொடர்ச்சியுடன் வெளிவருகின்றது. கலைச்செல்வனால் தொடங்கப்பட்ட இம்முயற்சி அவரது மறைவிற்குப் பின்னரும் தொகுபாசிரியர்களாக லஷ்மி, சுசீந்திரன் ஆகியோரது பங்களிப்புடன் தொடர்கிறது.

புலம்பெயர் ஈழத்தவர்களது பன்முக எழுத்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் களம் அமைக்கின்ற இவ் வெளியீட்டின் உள்ளடக்கத்தில் அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில் நிகழும் பல்வேறு விடயங்களில் ஆழமான பார்வையை புலப்படுத்தி வெளிவருகின்றது.