பகுப்பு:எக்ஸில்

From நூலகம்

"'எக்ஸில்"' 1990களில் பிரான்சிலிருந்து வெளிவந்த இருமாத இலக்கியச் சிற்றிதழ். எக்ஸில் வெளியீட்டகத்தின் குறிப்பிடத்தக்க ஓர் வெளியீடு இதுவாகும். இவ் வெளியீட்டில் கலைச்செல்வன், திருமாவளவன், சக்கரவர்த்தி, ஓவியர் கருணா ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இதன் முதலாவது இதழ் 1998ஆம் ஆண்டு வைகாசி-ஆனி இதழாக வெளிவந்தது.

உள்ளடக்கத்தில் ஆக்க இலக்கியங்களாகிய கவிதை, சிறுகதைகளில் புதிய வடிவங்களையும் புதிய கதைகளையும் முன்வைத்ததோடு விமர்சனம், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவற்றில் மிகக் கூடிய கவனம் செலுத்தியிருந்தது.