பகுப்பு:ஓலை

From நூலகம்

ஓலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கிய மேம்பாட்டு மாத இதழ். இதழின் தொகுப்பாசிரியர் ஆ. இரகுபதி பாலஶ்ரீதரன் ஆவார். முன்னைய வெளியீடுகளில் வ.சிவஜோதி, செங்கதிரோன் ஆகியோரும் ஆசிரியர்களாக பங்களித்துள்ளனர். இதன் முதலாவது வெளியீடு 2001ஆம் ஆண்டு பங்குனி மாத இதழாக வெளிவந்தது.

உள்ளடக்கத்தில் இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், ஆய்வுகள் ,கவிதைகளுடன் சங்கத்தின் வெளியீடுகள் பற்றிய தொகுப்பினையும், நிகழ்வுகளின் பதிவுகளையும் தாங்கி வெளிவந்தது. இதழ் வெளியீட்டில் தமிழ் இசை, தமிழ் நாடகம், தமிழ் மருத்துவம் ஆகிய தலைப்புக்களிலும் சிவகுருநாதன், நீலாவணன், மஹாகவி, இ.க.கந்தசுவாமி ஆகியோரின் நினைவுச் சிறப்பிதழ்களும் வெளியிடப்பட்டுள்ளது.