பகுப்பு:கவிதை (இதழ்)

From நூலகம்

கவிதை இதழ் 1994 ஆம் ஆண்டு சித்திரை - வைகாசி இல் இருந்து இளங்கவிஞர்களுக்காக இரு திங்கள் இதழாக வெளிவந்தது. அலை, தெரிதல் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்த அ. யேசுராசா அவர்களால் பல இளம் கவிஞர்கள் உருவாக வேண்டும் என்னும் நோக்கோடு இந்த இதழ் ஆரம்பித்து வெளிக்கொண்டு வரப்பட்டது. பல கவிதை போட்டிகளை இந்த இதழ் மூலம் நடாத்தி இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிக்க பட்டார்கள். இளம் கவிஞர்கள் பலரின் நேர்காணல்கள் இந்த இதழ்களில் இடம் பெற்றது. 1, ஓடைக்கரை வீதியில் இருந்து வெளிவந்த இந்த இதழ் 9 இதழ்களின் வெளியீட்டுடன் தனது வருகையை நிறுத்தி கொண்டது. இந்த இதழில் எழுத ஆரம்பித்த பலர் இன்று ஈழத்தின் முக்கிய கவிஞர் களாக திகழ்கிறார்கள்.