"ஆளுமை:திருநாவுக்கரசு, சிவக்கொழுந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=திருநாவுக்கரசு, சிவக்கொழுந்து|
+
பெயர்=திருநாவுக்கரசு|
 
தந்தை=சிவக்கொழுந்து|
 
தந்தை=சிவக்கொழுந்து|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சி. திருநாவுக்கரசு (1926.04.28 - ) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை சிவக்கொழுந்து. புகைப்படக் கலையை தனது தொழிலாக கொண்டிருந்த இவர் நாடகம், சிற்பம், வில்லிசை ஆகிய கலைகளிலும் தனது திறனை வெளிப்படுத்தியுள்ளார். சிற்பக்கலையை கற்றுக் கொள்வதற்காகச் இந்தியா சென்ற இவர் இந்திய இராணுவத்தில் இணைந்து சிலகாலம் பணியாற்றியுள்ளார்.  
+
 +
திருநாவுக்கரசு, சிவக்கொழுந்து யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த நாடகடவியலாளர். இவரது தந்தை சிவக்கொழுந்து. ஆரம்பக் கல்வியை யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரியில் மேற்கொண்டார். சிற்பத்துறையில் ஈடுபாடு காரணமாக தென்னிந்தியா சென்று அக்கலையைப் பயின்றார். இரண்டாம் உலகப்போர் காரணமாக நான்கு வருடகால கட்டாய இராணுவ சேவையில் பீரங்கிப்படையில் பணியாற்றி பின்னர் நாடு திரும்பினார். புகைப்படபிடிப்பாளராக தனது வாழ்க்கை ஆரம்பித்த இவர் நாடகத்துறையிலும் தமிழ்த்தேசியஅரசியலிலும் ஈடுபாடுடையவராக காணப்பட்டார்.
 +
1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்திலும் துப்பாக்கி முனைகளுக்கு மத்தியில் இவர் கலந்துகொண்டார். அடங்காப்பிடாரி புகழ் வி.சி.பரமானந்தத்துடன் இணைந்து அரசு அவர்கள் நாடகப் பயணத்தை ஆரம்பித்தார்.
 +
நல்லூர் காமாட்சி நாடகமன்றம், அரியாலை சரஸ்வதி வாசிகசாலை, வட இலங்கை நாடகமன்றம், வண்ணைக் கலைவாணர் நாடக மன்றம், அண்ணாமலை இசைத்தமிழ்மன்றம், யாழ் ஒரியன்கிளப், மானிப்பாய் மறுமலர்ச்சி மன்றம், யாழ்நாடக அரங்கக்கல்லூரி போன்ற அமைப்புக்கள் ஊடாக நாடகப்பணியாற்றினார்.  
  
பாரம்பரிய நாடகங்கள், சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், நடன நாடகங்கள், நவீன நாடகங்கள் என நாடக வகைகள், மோடிகள் யாவற்றிலும் கற்றறிவும் பாட்டறிவும் கொண்டவராக இவர் விளங்கியதோடு ஒப்பனைக் கலைஞராகவும் விளங்கினார். இலங்கை தமிழ் சினிமாக்களான டாக்ஸி டிரைவர், குத்து விளக்கு ஆகியவற்றில் நடித்துள்ளதோடு கடமையின் எல்லை என்னும் படத்தின் உதவி நெறியாளராகவும் செயற்பட்டுள்ளார்.
+
'''திப்புசுல்தான்''', '''தமிழன்கதை''', '''வீரமைந்தன்''', '''வீரத்தாய்''' என்பன இவர் இயக்கிய அரசவரலாற்று நாடங்களாகும். கலையரசு சொர்ணலிங்கம் தயாரித்த தேரோட்டிமகனில் அருச்சுனனாகவும், கோவலன் நாடகத்தில் கோவலனாகவும் நடித்து புகழ்பெற்றார்.  சொக்கனின் '''கவரிவீசிய காவலன்,''' '''ஞானக்கவிஞன்''', '''தெய்வப்பாவை''', '''கூப்பியகரங்கள்''', க.வேலுப்பிள்ளையின் '''வீரசிவாஜி''', '''சைலொக்''', '''ஒத்தொல்லொ''', .குழந்தை சண்முகலிங்கத்தின் '''வையத்துள் தெய்வம்''', '''பாஞ்சாலிசபதம்''' ஆகியவற்றையும் இயக்கியுள்ளார். சொக்கனின் '''நல்லைநகர் நாவலர்''' நாவலர் நூற்றாண்டு விழாவுக்காக இயக்கப்பட்டது.
  
இவரது கலையாற்றலுக்காய் ''நாடகச் செல்வன்'' என்ற பட்டத்தினை வவுனியா கலை இலக்கிய வட்டமும், ''கலைஞானச்சுடர்'' என்ற பட்டத்தினை 2008ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலக கலாசார பேரவையும் வழங்கி கௌரவித்துள்ளன.  
+
குழந்தை சண்முகலிங்கத்தின் '''எந்தையும் தாயும்''' நாடகத்தில் ஐயாத்துரை என்னும் பாத்திரம் ஏற்று சிறப்புற நடித்தவர். இந்நாடகம் யாழ்ப்பாணம், கொழும்பு , தமிழக நகரகங்களில் மேடை ஏற்றப்பட்டது. 1997இல் தமிழகத்திற்கு கலைப்பயணம் மேற்கொண்டு '''நாராய்நாராய்''' நாடகக்குழுவுடன் இணைந்து நடித்தார்.
 +
நாடகவியலாளராகவும் சிறந்த ஒப்பனைக்கலைஞராகவும் தொழில்ரீதியாக ஒளிப்படவியல் கலைஞராகவும் இருந்த கலைஞர் அரசு சிற்பம் செய்யும் ஆற்றலில் பங்களிப்புச் செய்துள்ளார். தியாகி சிவகுமாரன், பருத்தித்துறை புற்றளை கந்தமுருகேசனார், சதாவதானி புலோலியூர் கதிரவேலுப்பிள்ளை ஆகியோரது சிலைகளை தனது மருகர், ரமணி, அன்ரன் ஆசிரியருடன் இணைந்து செய்தார்.
 +
 
 +
கடமையின் எல்லை திரைப்படத்தில் உதவி நெறியாளராகவும் '''குத்துவிளக்கு''', '''டாக்சிடிரைவர்''' ஆகிய ஈழத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். வில்லிசைக்கலைஞராகவும் தன்னை வெளிப்படுத்தி பல்துறை ஆற்றல் உள்ள கலைஞராக அடைாயளப்படுத்தியுள்ளார்.
 +
 
 +
விருதுகள்
 +
 
 +
நாடகச் செல்வர் – வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்.
 +
 
 +
மாமனிதர் – தமிழீழ விடுதலைப் புலிகள்
 +
 
 +
நாடகச் செல்வன் என்ற பட்டத்தினை வவுனியா கலை இலக்கிய வட்டம்.
 +
 
 +
கலைஞானச்சுடர் என்ற பட்டத்தினை நல்லூர்ப் பிரதேச செயலகக் கலாச்சாரப் பேரவை 2008.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|153}}
 
{{வளம்|7571|153}}
 +
{{வளம்|15444|181}}
 +
{{வளம்|638|24-25}}
 +
{{வளம்|8095|30-37}}
 +
 +
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
* [https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81  அரசு பற்றி  யாழ்ப்பாணம் இணையத்தில்]
 +

23:56, 11 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் திருநாவுக்கரசு
தந்தை சிவக்கொழுந்து
பிறப்பு 1926.04.28
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருநாவுக்கரசு, சிவக்கொழுந்து யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த நாடகடவியலாளர். இவரது தந்தை சிவக்கொழுந்து. ஆரம்பக் கல்வியை யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரியில் மேற்கொண்டார். சிற்பத்துறையில் ஈடுபாடு காரணமாக தென்னிந்தியா சென்று அக்கலையைப் பயின்றார். இரண்டாம் உலகப்போர் காரணமாக நான்கு வருடகால கட்டாய இராணுவ சேவையில் பீரங்கிப்படையில் பணியாற்றி பின்னர் நாடு திரும்பினார். புகைப்படபிடிப்பாளராக தனது வாழ்க்கை ஆரம்பித்த இவர் நாடகத்துறையிலும் தமிழ்த்தேசியஅரசியலிலும் ஈடுபாடுடையவராக காணப்பட்டார். 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்திலும் துப்பாக்கி முனைகளுக்கு மத்தியில் இவர் கலந்துகொண்டார். அடங்காப்பிடாரி புகழ் வி.சி.பரமானந்தத்துடன் இணைந்து அரசு அவர்கள் நாடகப் பயணத்தை ஆரம்பித்தார். நல்லூர் காமாட்சி நாடகமன்றம், அரியாலை சரஸ்வதி வாசிகசாலை, வட இலங்கை நாடகமன்றம், வண்ணைக் கலைவாணர் நாடக மன்றம், அண்ணாமலை இசைத்தமிழ்மன்றம், யாழ் ஒரியன்கிளப், மானிப்பாய் மறுமலர்ச்சி மன்றம், யாழ்நாடக அரங்கக்கல்லூரி போன்ற அமைப்புக்கள் ஊடாக நாடகப்பணியாற்றினார்.

திப்புசுல்தான், தமிழன்கதை, வீரமைந்தன், வீரத்தாய் என்பன இவர் இயக்கிய அரசவரலாற்று நாடங்களாகும். கலையரசு சொர்ணலிங்கம் தயாரித்த தேரோட்டிமகனில் அருச்சுனனாகவும், கோவலன் நாடகத்தில் கோவலனாகவும் நடித்து புகழ்பெற்றார். சொக்கனின் கவரிவீசிய காவலன், ஞானக்கவிஞன், தெய்வப்பாவை, கூப்பியகரங்கள், க.வேலுப்பிள்ளையின் வீரசிவாஜி, சைலொக், ஒத்தொல்லொ, ம.குழந்தை சண்முகலிங்கத்தின் வையத்துள் தெய்வம், பாஞ்சாலிசபதம் ஆகியவற்றையும் இயக்கியுள்ளார். சொக்கனின் நல்லைநகர் நாவலர் நாவலர் நூற்றாண்டு விழாவுக்காக இயக்கப்பட்டது.

குழந்தை சண்முகலிங்கத்தின் எந்தையும் தாயும் நாடகத்தில் ஐயாத்துரை என்னும் பாத்திரம் ஏற்று சிறப்புற நடித்தவர். இந்நாடகம் யாழ்ப்பாணம், கொழும்பு , தமிழக நகரகங்களில் மேடை ஏற்றப்பட்டது. 1997இல் தமிழகத்திற்கு கலைப்பயணம் மேற்கொண்டு நாராய்நாராய் நாடகக்குழுவுடன் இணைந்து நடித்தார். நாடகவியலாளராகவும் சிறந்த ஒப்பனைக்கலைஞராகவும் தொழில்ரீதியாக ஒளிப்படவியல் கலைஞராகவும் இருந்த கலைஞர் அரசு சிற்பம் செய்யும் ஆற்றலில் பங்களிப்புச் செய்துள்ளார். தியாகி சிவகுமாரன், பருத்தித்துறை புற்றளை கந்தமுருகேசனார், சதாவதானி புலோலியூர் கதிரவேலுப்பிள்ளை ஆகியோரது சிலைகளை தனது மருகர், ரமணி, அன்ரன் ஆசிரியருடன் இணைந்து செய்தார்.

கடமையின் எல்லை திரைப்படத்தில் உதவி நெறியாளராகவும் குத்துவிளக்கு, டாக்சிடிரைவர் ஆகிய ஈழத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். வில்லிசைக்கலைஞராகவும் தன்னை வெளிப்படுத்தி பல்துறை ஆற்றல் உள்ள கலைஞராக அடைாயளப்படுத்தியுள்ளார்.

விருதுகள்

நாடகச் செல்வர் – வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்.

மாமனிதர் – தமிழீழ விடுதலைப் புலிகள்

நாடகச் செல்வன் என்ற பட்டத்தினை வவுனியா கலை இலக்கிய வட்டம்.

கலைஞானச்சுடர் என்ற பட்டத்தினை நல்லூர்ப் பிரதேச செயலகக் கலாச்சாரப் பேரவை 2008.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 153
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 181
  • நூலக எண்: 638 பக்கங்கள் 24-25
  • நூலக எண்: 8095 பக்கங்கள் 30-37


வெளி இணைப்புக்கள்