"ஆளுமை:சரஸ்வதி, பாக்கியராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:சரஸ்வதி, பாக்கியராசா பக்கத்தை ஆளுமை:சரஸ்வதி பாக்கியராசா என்ற தலைப்புக்கு வழிமா...)
வரிசை 18: வரிசை 18:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|84}}
 
{{வளம்|7571|84}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

15:55, 17 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சரஸ்வதி பாக்கியராசா
பிறப்பு 1928.04.07
ஊர் கொக்குவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரஸ்வதி பாக்கியராசா (1928.04.07 - ) சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக்கலைஞர். தனது ஒன்பதாவது வயது முதல் இசை பயில ஆரம்பித்து தென்னிந்திய இசைக் கலைஞர்களிடம் இசை பயின்றார். 1942ஆம் ஆண்டு இடம் பெற்ற உலக மகாயுத்த ஆரம்ப நாளன்று இவரின் முதல் இசைக் கச்சேரி சிங்கப்பூர் வானொலியில் ஒலிபரப்பாகியது.

பின்னர் தனது தாயாரின் சொந்த இடமான யாழ்ப்பாணம் கொக்குவிலுக்கு வந்து 1948ஆம் ஆண்டு முதல் கொக்குவில் இந்துக் கல்லூரியின் சங்கீத ஆசிரியராக நியமனம் பெற்றார். 1957ஆம் ஆண்டு சென்னை சென்று கர்நாடக இசைக் கல்லூரியில் இணைந்து சங்கீத வித்துவான் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். 1974ஆம் ஆண்டு இசை விரிவுரையாளராக கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப் பெற்றார்.

கோயில்களில் கச்சேரி செய்ய ஆரம்பித்த முதற் பெண்மணி இவராவார். இவரது இசைக் கச்சேரிகள் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. பாலர் விஹாஸ் என்ற பாலருக்கான பண்ணிசைப் பாடல் வகுப்பினை ஆரம்பித்து சிறுபிள்ளைகளையும் ஊக்குவித்தார். வட இலங்கை சங்கீத சபை நடாத்தி வரும் சங்கீத பரீட்சைகளுக்காக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மாணவ மாணவிகளைத் தயார்படுத்தி அவர்கள் சித்தியடைய வழிசெய்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 84