ஆளுமை:சிவநாயகி, தியாகராசா

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:17, 23 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவநாயகி தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவநாயகி தியாகராசா
தந்தை தம்பையாப்பிள்ளை
தாய் பவளநாயகி
பிறப்பு 1904.08.03
ஊர் தெல்லிப்பழை
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவநாயகி தியாகராசா (1904.08.03 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பழையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை தம்பையாப்பிள்ளை; தாய் பவளநாயகி. இவர் தனது தந்தையார் தம்பையாப்பிள்ளையிடமே அரிச்சுவடியையும் ஆரம்பக்கல்வியையும் கற்றார். பின்னர் இராமநாதன் பெண்கள் கல்லூரியில் கல்விகற்றார்.

சமய நூல்கள் பலவற்றைவெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு. இவரது கன்னிப்படைப்பாக "காரைக்காலம்மையார்" என்ற நூல் வெளியிடப்பட்டது. இவர் 1948, 1981 ஆகிய ஆண்டுகளில் சென்னை சைவசித்தாந்த சமாஜம் நடாத்திய மாகாநாடுகளில் கலந்து உரையாற்றியுள்ளார். இவர் பாடிய தில்லைக்கூத்தன் பக்திப்பாமாலை என்ற நூல் அறிஞர்கள் பலரால் போற்றப்பட்டது. இவர் 'பத்திமை மாமணி' என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4413 பக்கங்கள் 38-44