"ஆளுமை:கந்தையாபிள்ளை, சபாபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

23:57, 21 மார்ச் 2024 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தையாப்பிள்ளை
தந்தை சபாபதிப்பிள்ளை
தாய் காமாட்சியம்மை
பிறப்பு 1879
இறப்பு 1958
ஊர் கோப்பாய்
வகை எழுத்தாளர், புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையாப்பிள்ளை, சபாபதிப்பிள்ளை (1879 - 1958) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர், புலவர். இவரது தந்தை சபாபதிப்பிள்ளை; தாய் காமாட்சியம்மை.

சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் தமிழையும் ஆங்கிலத்தையும் முறையாகக் கற்ற இவர், கொழும்பு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்மொழிப் பாட விரிவுரையாளராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் கல்வித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் தமிழ்ப் பரீட்சகராகவும் பணியாற்றினார். இவர் வித்தகம் வாரப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியதால் வித்தகம் கந்தையா என்று அலைக்கப்பட்டார். மணக்குள விநாயகர் ஒருபா ஒருபஃது, ஜோர்ச் மன்னர் இயன் மொழி வாழ்த்து, உண்மை முத்தி நிலை ஆராய்ச்சி, திருவாசக உண்மை என்பவை இவரது நூல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 158-159
  • நூலக எண்: 963 பக்கங்கள் 67