ஆளுமை:தையல்நாயகி, சுந்தரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:27, 16 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தையல்நாயகி ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தையல்நாயகி சுந்தரம்
பிறப்பு 1959.05.04
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு.தையல்நாயகி (1959.04.05 - ) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவர் தனது தாயாரிடமே நாதஸ்வர இசையை முழுமையாக கற்றுத் தேர்ந்தார். கல்வியங்காடு சிவஞானப்பிள்ளையார் ஆலயத்தில் இவரது நாதஸ்வர அரங்கேற்றம் நடைப்பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தாயாரோடும் ஏனைய குழுக்களுடன் இணைந்தும் பல நிகழ்ச்சிகளில் தனது நாதஸ்வர இசையை வெளிப்படுத்தி வந்த இவர் வெளிநாடுகளுக்கும் ஈழத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நாதஸ்வரக் கலைப்பணியை ஆற்றினார்.

இவருக்கு நாதஸ்வர சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை 2001ஆம் ஆண்டு சுவிஸ் பாசல் அம்மன் ஆலய தேவஸ்தானம் வழங்கி பாராட்டிக் கௌரவித்ததோடு மேலும் 2003ஆம் ஆண்டு சுவிஸ் சூரிச் முருகன் ஆலயம் இவருக்கு ஸ்வரதிலக பூபதி என்னும் பட்டத்தையும் வழங்கியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 131