"ஆளுமை:பத்மா, சோமகாந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 23: வரிசை 23:
 
{{வளம்|300|126-127}}
 
{{வளம்|300|126-127}}
 
{{வளம்|7571|60}}
 
{{வளம்|7571|60}}
 +
{{வளம்|13844|89-92}}

00:11, 26 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பத்மா சோமகாந்தன்
பிறப்பு 1934.03.15
ஊர் ஓட்டுமடம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மா சோமகாந்தன் (1934.03.15 - ) யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் பாடசாலை அதிபராக இருந்து ஓய்வு பெற்றவராவார். ஈழத்தின் சுதந்திரன் வாரப் பத்திரிகை முதன் முதலாக 1954 ம் ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசினைப் பெற்று ஈழத்தின் இலக்கிய உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவ இவர் எழுத்துத் துறையில் மட்டுமல்லாமல் மேடைகளில் உரையாற்றுவதிலும் தன் திறமையை வெளிக்காட்டியவர். இவர் ”புதுமைப்பிரியை” என்னும் புனைபெயரில் ஈழத்துப் பத்திரிகைகளில் எழுதி வந்தார்.

கடவுளின் பூக்கள், புதிய வார்ப்புக்கள், வேள்வி மலர்கள், மாண்புறு மகளிர் (புகழ் பூத்த ஈழத்துப் பெண்களின் வரலாறு), அனுமன் கதை, ஆகிய நூல்களை வெளியிட்டுள்ள பத்மா சோமகாந்தன் ”பெண்ணின் குரல்” என்னும் மகளிர் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கினார். இவர் வீரகேசரிப் பத்திரிகையில் 2002ம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து 2005ம் ஆண்டு முற்பகுதிவரை வாராவாரம் எழுதிவந்த ”நெஞ்சுக்கு நிம்மதி” என்னும் கேள்வி பதில் நிகழ்ச்சி மூலம் பல வாசகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு ”இலக்கிய கலாவித்தகி”, ”செஞ்சொற்செல்வி” முதலிய கௌரவப் பட்டங்கள் சூட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 126-127
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 60
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 89-92