நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஜனவரி 2009

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
2889.jpg

2009 ஜனவரி முதல் வாரம்: எஸ்தாக்கியார் நாடகம்: எஸ்தாக்கியார் என்ற நாட்டுக்கூத்து உரோமபுரி கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டுக்கூத்தாகும். எஸ்தாக்கியார் என்னும் இந்நூல் மாதகல் மதுரகவிப்புலவர் வ. சூசைப்பிள்ளை அவர்களால் பாடப்பெற்றது. வ. சூழைப்பிள்ளை அவர்கள் ஏற்கனவே சங்கிலியன் நாடகம், கருங்குயிற்கொன்றத்துக் கொலை நாடகம் போன்வற்றைப் பாடிப்புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாசிக்க...2890.jpg

2009 ஜனவரி இரண்டாம் வாரம்: ஞானசவுந்தரி: ஞானசவுந்தரி என்னும் இந்நூல் தென்மோடி வகையைச் சேர்ந்த நாட்டுக்கூத்தாகும். இதைப் பாடியவர் ஞா. ம. செல்வராசா அவர்களாவார். காவலூர் புனித அந்தோனியார் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி அரங்கேற்றப்பட்ட இந்நாட்டுக்கூத்தானது பின்னர் சில்லையூர்ச் செல்வராசன் அவர்களால் நூலுருவில் கொண்டுவரப்பட்டது. வாசிக்க...No cover.png

2009 ஜனவரி மூன்றாம் வாரம்: தேவசகாயம்பிள்ளை: அராலியைச் சேர்ந்த சிறீ முத்துக்குமாருப்புலவர் பாடிய தேவசகாயம்பிள்ளை என்னும் நாட்டுக்கூத்து 1974 ஆம் ஆண்டு நூலுருவில் வெளிவந்தது. தேவசகாயம்பிள்ளை என்னும் இந்நாட்டுக்கூத்தானது இந்திய தேசத்து திருவாங்கூர் என்னும் இராச்சியத்தை மையமாகக் கொண்ட கதையாகும். இநூலில் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் இயற்றிய சிகாமணி மாலையில் உள்ள சில பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வாசிக்க...No cover.png

2009 ஜனவரி நான்காம் வாரம்: விசய மனோகரன்: வெ. மரியாம்பிள்ளை அவர்களால் பாடப்பெற்ற விசய மனோகரன் என்னும் நாட்டுக்கூத்தே விசய மனோகரனாகும். 1968 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்ற இந்நூலை பதிப்பித்தவர் மு. வி. ஆசீர்வாதம் அவர்களாவார். இந்நாட்டுக்கூத்து மேடையேறிய காலங்களில் இக்கூத்தை கலாநிதி ம. யோசேப்பு அவர்கள் மேற்பார்வை செய்திருக்கின்றார் என்பது இக்கூத்தின் விசேட அம்சமாகும். வாசிக்க...

மொத்த ஆவணங்கள் : 114,423 | மொத்த பக்கங்கள் : 3,563,617

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [92,536] பல்லூடக ஆவணங்கள் [22,141] சுவடிகள் [678]

தகவல் மூலங்கள் : நூல்கள் [12,885] இதழ்கள் [13,969] பத்திரிகைகள் [56,913] பிரசுரங்கள் [1,212] சிறப்பு மலர்கள் [5,641] நினைவு மலர்கள் [1,561] அறிக்கைகள் [389]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [5,490] பதிப்பாளர்கள் [4,703] வெளியீட்டு ஆண்டு [197]

உசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,723] ஆளுமைகள் [3,194] | குறிச்சொற்கள் [122] வலைவாசல்கள் [25]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [2,175] | மலையக ஆவணகம் [990] | பெண்கள் ஆவணகம் [1,451]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [10325] | வாசிகசாலை [58] | முன்னோர் ஆவணகம் [586]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [794]

தொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [1,179] | இலங்கையில் சாதியம் [111] | உதயன் வலைவாசல் [10,135] ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678]

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க