பகுப்பு:இளம்பிறை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இளம்பிறை 1964 தொடக்கம் கொழும்பிலிருந்து வெளிவந்த இஸ்லாமிய மாத இதழ். இதன் முதலாவது இதழ் 1964 கார்த்திகையில் இருந்து திங்கள் வெளியீடாக வெளிவந்தது. இதழின் நிர்வாக ஆசிரியர் எம். ஏ. ரஹ்மான் ஆவார். இதனை இளம்பிறை நிர்வாகத்தினர் கொழும்பில் இருந்து வெளியிட்டு உள்ளனர். இது 1964 - அருள் வாக்கிய மலர்,1965- சாகித்திய மலர் மற்றும் கல்வி மலர், 1966 - இளைஞர் மலர் , 1967 - ஆசாத் மலர் , 1968 - திருக் குர் ஆன் மலர், 1969- ஐந்தாம் ஆண்டு மலர் உடன் மீலாத் மலர் இணைந்தும் மற்றும் காந்தி நூற்றாண்டு மலர், 1971 - தை. அ. சிறப்பு மலர் என பலவகையான சிறப்பு மலர்களாக வெளிவந்துள்ளது.

அத்துடன் 1960 களில் இருந்து இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்த இவ் இதழ் உள்ளடக்கத்தில் இஸ்லாமிய சிந்தனைகள், இலக்கிய ஆய்வுகள், சிறுகதை கவிதை, நூல் விமர்சனம் என்பவற்றைத் தாங்கி வெளிவந்தது. அதுபோலவே ஏனைய மதத்தினரின் ஆக்கங்களும் இதில் வெளிவந்தன. அவை அக்காலத்தில் காணப்பட்ட மிகவும் தவிர்க்க முடியாத காத்திரமான எழுத்தாளர்களின் ஆக்கங்களாக இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இளம்பிறை&oldid=475725" இருந்து மீள்விக்கப்பட்டது