பகுப்பு:சங்கத்தமிழ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'சங்கத்தமிழ்' இதழானது, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரின் ஒரு வெளியீடாகும். இவ் வெளியீடு 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, காலாண்டு இதழாகத் தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர், திரு.க.இரகுபரன். இவ் வெளியீடு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அடையாளமாகவும், தமிழியல் சிந்தனை, ஆய்வு மரபுகளின் வளங்களைப் பகிர்ந்துகொள்ளும் பொதுக்களமாகவும் வெளிவருகின்றது.

தமிழின் தொன்மையை, உயிர்ப்பான கூறுகளை, வளங்களை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கையளிக்கும் வகையில் விமர்சனங்களும் ஆய்வுகளும் கொண்ட கட்டுரைகளையும், கவிதைகளின் மீதான பன்முக தரிசனத்துக்கான வீச்சுக்களையும் உள்ளடக்கத்தில் கொண்டுள்ளது. இவற்றுடன், இதழின் கனதிக்கும் நோக்கத்திற்கும் பொருந்துவதாய் அமைந்த கட்டுரைகளைத் தேடிப்பெற்று மீள் பிரசுரிப்பும் செய்கிறது. ISSN:20129491

தொடர்புகளிற்கு: ஆசிரியர், 'சங்கத்தமிழ்', கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல: 07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு-06, இலங்கை T.P: 0094-11-2363759 E-mail: tamilsangamcolombo@yahoo.com Web: www.colombotamilsangam.com

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சங்கத்தமிழ்&oldid=446786" இருந்து மீள்விக்கப்பட்டது