பகுப்பு:புதுசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புதுசு இதழ் 80 களின் ஆரம்பத்தில் வெளிவர ஆரம்பித்தது. மகாஜன கல்லூரியின் பழைய மாணவர்களான 4 பேரின் கூட்டிணைவாக இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. இதன் நிர்வாக ஆசிரியராக - நா. சபேசன். ஆசிரியர் குழு - இளவாலை விஜயேந்திரன், பாலசூரியன், அளவெட்டி அ. ரவி ஆகியோர் அங்கம் வகித்தனர். இலக்கியம் சார்ந்த சஞ்சிகையாக இது வெளியானது. 1987 வரை இந்த இதழ் வெளியானது. காலாண்டு சஞ்சிகையாக வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் விநியோகம், கட்டுரைகள் பெறுவதிலான சிரமங்கள் காரணமாக கால ஒழுங்கில் வெளி வர இல்லை. ஆசிரியர்கள் புலப்பெயர்வு காரணமாக இந்த இதழின் முதல் 7 இதழ்களை 4வரவும் கடைசிக்கு முன்னரான 3 இதழ்களையும் சபேசன், ரவி உம் கடைசி இதழை ரவியும் வெளியீடு செய்தனர். முதலாவது இதழ் 1000 பிரதிகள் அச்சு செய்யப்பட்டு விற்க பட்டது. ஏனையவை 500 பிரதிகள் அச்சு செய்யப்பட்டது. இந்த இதழில் சஞ்சஜன் பக்கம் எனும் பெயரில் பல காத்திரமான விமர்சனங்கள் இடம் பெற்றன. உருவத்துக்கு முன்னிலை கொடுத்து இந்த இதழை வெளியீடு செய்தனர். முதலாவது இதழ் சுன்னாகம் யாழ்ப்பாணம் ஜெயா அச்சத்திலும் இறுதி இதழ்கள் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்திலும் அச்சு செய்ய பட்டது.இளவாலை இல் இருந்து இந்த இதழ் வெளியானது.

"புதுசு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதுசு&oldid=234797" இருந்து மீள்விக்கப்பட்டது