பகுப்பு:வலு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'வலு' இதழானது மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையமான 'கருவி'என்ற அமைப்பின் வெளியீடாக அமைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் பிரதம ஆசிரியர் திரு.க.தர்மசேகரம். மாற்றுத்திறனாளிகள் என்ற மகுடத்தில் தங்களை மலர்த்த விரும்பும் சமூக மாந்தர்களின் ஆக்கங்களையும் விசேட தேவைக்கு உட்பட்டவர்களுக்காக பணியாற்றுகின்ற நிறுவனங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களையும் தாங்கி வெளிவருகின்றது.

இதழின் உள்ளடக்கமானது அங்கக்குறைபாடுகளோடு வாழ்கின்ற மனிதர்களின் ஆரோக்கியமான இருத்தலுக்கான சாத்தியப்பாடுகளை முன்நிறுத்தியதாக அமைந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், சைகை மொழி பற்றிய விளக்கங்கள் என்பவற்றை தாங்கியுள்ளது. இச் சஞ்சிகை மாற்றுத்திறனாளிகள் உபயோகிக்கத்தக்க வகையில் ஒலி வடிவில் இறுவெட்டாகவும் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு:- கருவி, மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையம், இல. 1166/15,அருளம்பலம் வீதி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம். T.P:- நா.கீதாகிருஷ்ணண் 0094-75-2275205 ஆ.பரமேஸ்வரன் 0094-77-9791366 E-mail:-karuvi.org@gmail.com web:-karuvi.org

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வலு&oldid=157828" இருந்து மீள்விக்கப்பட்டது