"பயனர் பேச்சு:Muthuaiyer" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(சுயசரிதைச் சுருக்கம்) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
12:35, 8 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்
எனது பெயர் முத்து.
பிறந்த ஊர் நாகப்பட்டினம்
வளர்ந்த ஊர் வழுவூர் என்ற சிறிய கிராமம். இது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், எலந்தங்குடி என்ற புகைவண்டி நிலையத்திற்கு மேற்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது.
இங்கு நான் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பு. அதன் பிறகு இவ்வூரை அடுத்துள்ள மங்கநல்லூர் என்ற ஊரில் கே.எஸ்.ஓ உயர் நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.ஏல்.சி வரை படித்துவிட்டு, அலுவலகப் பணிகள் புரிய இந்தியத் தலை நகரமான தில்லிக்கு 1963 ஆம் ஆண்டு வந்தேன்.
அன்று முதல் இன்று வரை தில்லியில்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது நான் ஓர் ஓய்வுபெற்ற பத்திரிகை நிரூபர் என்பதால் நூல்களைப் படிப்பதில் எனக்குப் பேரார்வம். அதனால்தான் இப்பயனுள்ள நூலகத்தின் அங்கத்தினரானேன்.
இந்த நூலகத்துக்கு என்னாலான உதவிகள் செய்யலாம் என்றிருப்பின் என் உடல் சக்திக்கேற்ப நான் செய்ய இயலும். நான் ஓய்வு பெற்றவன் என்பதாலும், ஓய்வூதியம் ஒன்றும் வராததால் எனக்கு அவ்வளவு பண வசதியில்லை. ஆனால் பிறர்க்குதவ வேண்டும் என்ற எண்ணமுடையவன் நான் என்பதால் என்னாலான உதவிகளைச் செய்யக் காத்து நிற்கிறேன். நன்றி....வணக்கம்.......முத்து