வலைவாசல்:தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
						
						Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:07, 6 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("பாடசாலைகளின் வெளியீடுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பாடசாலைகளின் வெளியீடுகளை ஆவணப்படுத்துவதனூடாகப் பாடசாலைகளின் வரலாறுகளைப் பதிவு செய்யும் முயற்சிகள் நூலக நிறுவனத்தால் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. பொதுவாக ஈழத்துப் பாடசாலைகளில் ஆவணக் காப்பகங்களை பேணும் மரபு இல்லை. பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் குறித்த பாடசாலைகளின் ஆண்டறிக்கைகள், அதிபர் அறிக்கைகள், மாணவர் கழகங்களும் சங்கங்களும் வெளியிடும் மலர்கள், பழைய மாணவரின் வெளியீடுகள், வெள்ளிவிழா மலர்கள், பொன்விழா மலர்கள், நூற்றாண்டு மலர்கள் போன்றவற்றிலேயே காணப்படுகின்றன. ஆயினும் இத்தகைய வெளியீடுகள் கூடப் பாடசாலைகளில் பேணப்படுவது குறைவாக உள்ளது. அவ்வாறு பேணப்படும் ஆவணங்கள் கூட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பதில்லை.
