பகுப்பு:காற்று வெளி
காற்றுவெளி இலண்டனிலிருந்து வெளிவரும் ஓர் இதழாகும். இது காலவரையறை எதுவும் இன்றி அவ்வப்போது வெளிவரும். இவ்விதழின் ஆசிரியராக சோபா அவர்கள் காணப்படுகின்றார். இதனை இலங்கையைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலரான 'முல்லை அமுதன்' எனும் புனைபெயர் கொண்ட மகேந்திரன் இரத்தினசபாபதி அவர்கள் இன்றுவரை வெளியிடுகின்றார். இவ்விதழ் விளம்பரங்கள் எதுவும் இன்றி வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு கலை இலக்கிய இதழ் ஆகும். மொத்தம் நூற்றி ஒன்பது (109) இதழ்கள் இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் பக்க அளவிலும் சரி, படைப்புகள் அளவிலும் சரி, வடிவமைப்பிலும் சரி, மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று இருக்கின்றன என்றே கூறலாம்.
உலகளாவியத் தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு வெளியாகக் காற்றுவெளி காணப்படுகிறது. கவிதை, கட்டுரை, துணுக்குச்செய்திகள், மொழியாக்கம் போன்ற பல படைப்புகள் இவ்விதழில் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொரு படைப்பிற்கும், கூடுமானவரை நவீன ஓவியங்கள் வரைகலை ஓவியங்களாகத் தரப்பட்டிருக்கின்றன. அது அந்தப் படைப்பின் புரிதலை இன்னும் ஆழப்படுத்தி அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்விதழின் அனைத்து வருகையினையும் பின்வரும் வலைத்தளத்தில் பார்வையிட முடியும். https://issuu.com/kaatruveli
Pages in category "காற்று வெளி"
The following 24 pages are in this category, out of 24 total.
க
- காற்று வெளி 2002.04
- காற்று வெளி 2002.08
- காற்று வெளி 2007.06
- காற்றுவெளி 2000.11
- காற்றுவெளி 2003.05
- காற்றுவெளி 2006.01
- காற்றுவெளி 2007.11
- காற்றுவெளி 2008.03
- காற்றுவெளி 2010.04
- காற்றுவெளி 2017.03
- காற்றுவெளி 2019.07 (சிற்றிதழ்ச் சிறப்பிதழ்)
- காற்றுவெளி 2020.04
- காற்றுவெளி 2022.08
- காற்றுவெளி 2023.09 (செம்பியன் செல்வன் நினைவுச் சிறப்பிதழ்)
- காற்றுவெளி 2024.02
- காற்றுவெளி 2024.03
- காற்றுவெளி 2024.04
- காற்றுவெளி 2024.05
- காற்றுவெளி 2024.06 (அகஸ்தியர் சிறப்பிதழ்)
- காற்றுவெளி 2024.07
- காற்றுவெளி 2024.08
- காற்றுவெளி 2024.09
- காற்றுவெளி 2025.01
- காற்றுவெளி 2025.04