பகுப்பு:சாதனை
From நூலகம்
2008ஆம் ஆண்டு தொடக்கம் மாத இதழாக வெளிவந்த பெரியவர்கள் சிறியவர்கள் அனைவருக்குமான இதழாக சாதனை காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக யோ.சத்யன் என்பவர் காணப்பட்டுள்ளார். இணையாசிரியர்களாக க.சதானந்தவேல் மற்றும் சோ. செந்தில்குமார் ஆகியோர் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் மாணவ ஆசிரியர்களாக எட்டு பேர் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதே. இதை தமிழ்த் தாய் வெயியீட்டகம் வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக தமிழியல், சினிமா, திருக்குறள், விளையாட்டு, விஞ்ஞானம், மருத்துவம், அறிவியல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன, அவற்றுள் சிறுவர்களின் சுய ஆக்கங்கள் இடம் பெறுவதும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.