பகுப்பு:ஞானக்கதிர்

From நூலகம்

ஞானக்கதிர் சஞ்சிகை யாழ்ப்பாணத்தில் இருந்து 80களின் இறுதியிலும் 90களின் ஆரம்பத்திலும் வெளிவந்தது. இதுவொரு அன்பு நெறிக்கான ஆன்மிக மாத மஞ்சரி ஆகும். இதனை யாழ்ப்பாணத்தின்கைக் களமாகக் கொண்டு நியூ உதயன் பப்ளிகேசன் வெளியிட்டுள்ளது. பின்னைய காலங்களில் இதன் அறுவர் கொண்ட ஆசிரிய குழுவினர் காணப்பட்டுள்ளனர். அக்குழுவின் பிரதம ஆசிரியராக திரு.ம.வ. கானமயில்நாதன் அவர்கள் காணப்பட்டுள்ளார். அன்பு-அறநெறி-ஆன்மீகம் சார்ந்த விடயங்களை வெளியீடு செய்த இவ்விதழின் உள்ளடக்கங்களாக சைவ சமயம் சார் கட்டுரைகள். கடவுளர் பற்றிய பாடல்கள், சைவ பெரியார்கள், கோயில் பற்றிய தகவல்கள், பூஜை முறைகள், திருவிழாச் செய்திகள் முதலான விடயங்கள் இந்த இதழ்களில் வெளியாகி உள்ளன.