பகுப்பு:நாவலர் குரல்

From நூலகம்

நாவலர் குரல் இதழானது 1985 காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த செய்திப் பத்திரிகையாக இது காணப்படுகின்றது. இதுவொரு நாவலர் புகழ் பரப்பும் நல்ல தமிழ் ஏடாகும். இதனை யாழ்பாணம் , காங்கேசன்துறையில் அமைந்திருந்த ஆறுமுகநாவலர் பணிமன்றத்தினர் ஶ்ரீ காந்தா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இதில் அக்கால கட்டத்தில் நாவலரின் செயற்பாடுகளே மேவிநிற்கின்றன. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக நாவலர் பற்றிய செய்திகள், அவரின் பணிகள், தமிழ்ப்புலமை, குறித்த மன்றத்தின் செயற்பாடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.