பகுப்பு:நிர்மாணி
From நூலகம்
நிர்மாணி இதழானது 1995 காலப்பகுதிகளில் வெளிவந்த காலாண்டு இதழாகும். இதனை பொறியியல் பகுதி, தமிழீழ நிர்வாக சேவை, தமிழீழம் வெளியிட்டுள்ளது. இது சகல பொறியியல் துறைசார் விடயங்கள், நிர்மாண விடயங்கள், பராமரிப்பு விடயங்கள் முதலான தகவல்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக நீர் வழங்கல், மின் வழங்கல், வீதி பாலங்கள், வைத்திய சாலை புணரமப்பு, கழிவகற்றல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.