பகுப்பு:பிரசுரகளம்
From நூலகம்
பிரசுரகளம் இதழானது 1990ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த காலாண்டு இதழான 'நூல்த்தேட்டம்' எனும் சஞ்கிகையின் மீள் வருகையாகும். இது 2004 இல் இருந்து மீள் வருகை கண்டுள்ளது. இதன் ஆசிரியராக என். செல்வராஜா அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை இதனை அயோத்தி நூலக சேவைகளின் ஐக்கிய இராச்சியக் கிளை வெளியிட்டுள்ளது. ஈழத்து இலக்கியப் பரப்பில் தாயகத்திலும், புகலிடத்திலும் வெளியாகிக் கொண்டிருக்கும் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களையும் , சஞ்கிகைகளையும், நூல் வெளியீட்டு முயற்சிகளையும் வெளியிடும் நோக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடகங்களாக சமூகத்தில் இலைமறைகாய்களாய் காணப்படும் தீவிர வாசகர்களுக்கு உதவும் நூல்கள், சஞ்சிகைகள், நூல் வெளியீட்டு நிகழ்வுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.