பகுப்பு:புதிய காலைக்கதிர்

From நூலகம்

புதிய காலைக்கதிரானது கடந்த 1989 மற்றும் 1990 காலப்பகுதிகளில் வெளிவந்த 'காலைக்கதிர்' இதழின் புதிய வருகையாக 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக ஜெ. நிவர்சன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு காலையடி மறுமலர்ச்சி மாணவர் மன்றம் வெளியிட்டுள்ளது. கிராமத்து இளைஞர்களின் திறன்களை வெளிக்கொணரும் பொருட்டு இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கல்வி, கலை, இலக்கிய, சமூக, விஞ்ஞான, அறிவியல், தொழினுட்ப விடயங்கள் வெளிப்படுத்தும் மற்றும் ஆவணப்படுத்தும் ஆக்கங்கள் காணப்படுகின்றன.