பகுப்பு:பூங்கனி

From நூலகம்

பூங்கனி இதழானது 2005 ஆம் ஆண்டு தொடக்கம் வவுனியாவினைக் களமாகக் கொண்டு வெளிவந்த சிறுவர் மாத இதழாகும். இதன் ஆசிரியர்களாக கே. ஆர். றஜீவன் மற்றும் ஆர். இராஜேஸ்வரன் ஆகியோர் காணப்படுகின்றனர். சிறுவர்களிடம் வாசிப்புத்திறனை அதிகரிக்கும் பொருட்டும், அறிவித்தேடலை விருத்தி செய்யும் விதமாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும், அவர்களிடம் காணப்படும் தனிப்பட்ட திறமையை வளர்த்தெடுக்கும் நோக்குடனும் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக சிறுவர்கள் பெரிதும் விரும்பும் கதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், நகைச்சுவைப் பகுதி, பாடவிதானங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.