பகுப்பு:மூன்றாவது கண் விளம்பி
மூன்றாவது கண் விளம்பி மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு 2021 ஜனவரி முதல் வெளிவந்த இதழாக இது காணப்படுகின்றது. உள்ளூரில் காணப்படுகின்ற உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக உள்ளூர் வளம், தொழில், வாழ்வு என்பவற்றை மையப்படுத்தியதாக மூன்றாவது கண் விளம்பியானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆக்கக்குழுவில் சி.ஜெயசங்கர், து,கௌரீஸ்வரன், கி. கலைமகள், செ.சுமித்ரா, இ.கிரிஷ்டி, உ. பிரியதர்சன் ஆகியோர் காணப்படுகின்றனர். சி.ஜெயசங்கர் அவர்கள் மட்டக்களப்பு வணசிங்கா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அவ்வகையில் இதன் உள்ளடங்களாக உள்ளூர் உற்பத்திகள், வைத்தியம், சாலையோர வியாபாரம், மருத்துவ முறைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
தொடர்புகளுக்கு- கலாநிதி .சி. ஜெயங்கர், 153 A, விமான நிலைய வீதி , 9 குறுக்கு , திருப்பெருந்துறை , மட்டக்களப்பு தொலைபேசி - 0778095587
Pages in category "மூன்றாவது கண் விளம்பி"
The following 2 pages are in this category, out of 2 total.