பகுப்பு:பூங்காவனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'பூங்காவனம்' இதழானது அறிமுக எழுத்தாளர்களுக்கும், வளரிளம் படைப்பாளிகளுக்கும் களமாய் அமைந்த கலை இலக்கிய சமூக காலாண்டு இதழாகும். குறிப்பாக பெண் எழுத்தாளர்களுக்கு பிரதான இடத்தை வழங்குகிறது. 2010ஆம் ஆண்டு வைகாசி மாதம் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் பிரதம ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத் இணை ஆசிரியர் எச்.எப்.ரிஸ்னா.

ஒவ்வொரு இதழிலும் அட்டையில் மூத்த பெண் எழுத்தாளரின் புகைப்படமும் உள்ளடக்கத்தில் அவரது இலக்கிய பணி தொடர்பான கட்டுரை, நேர்காணல் என்பனவும் இடம்பெறுவது இதழின் சிறப்பு. இலக்கிய ரசனை என்ற தளத்தில் இதன் உள்ளடக்கமானது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனம் என்பவற்றையும் நூல் விமர்சனம், நூல் அறிமுகம் என்பவற்றையும் தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- “poongavanam”, 21E,Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka. T.P:-0094-77-5009222,0094-71-9200580 E-mail:-poongavanam100@gmail.com Website:-www.poongavanam100.blogspot.com

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூங்காவனம்&oldid=448566" இருந்து மீள்விக்கப்பட்டது