ஆளுமை:அஞ்சலா, கோகுலகுமார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஞ்சலா
தந்தை வேலுப்பிள்ளை
தாய் மனோன்மணி
பிறப்பு
ஊர் ஓமந்தை,பாலமோட்டை
வகை பெண் பெண்கள் அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஞ்சலா, கோகுலகுமார் ஓமந்தையில் உள்ள பாலமோட்டையில் பிறந்த பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் மனோன்மணி. ஆரம்பக் கல்வியை பாலமோட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும், ஓமந்தை மத்திய கல்லூரியிலும் கற்றார். உயர்தரத்தில் கலைத்துறையில் கற்றபோதும் நாட்டில் நிலவிய அசாதரண சூழல் காரணமாக உயர்தர பரீட்சையை எழுத முடியாமல் போய்விட்டாதாக குறிப்பிடுகின்றார்.

பெண்கள் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென்ற கணவரின் உந்துதலின் காரணமாக 2007ஆம் ஆண்டு பஸ் ஓட்டுனராக தொழிலை ஆரம்பித்து 2018ஆம் ஆண்டு வரை அத்தொழிலை புரிந்துள்ளார். ஆரம்பத்தில் இத்தொழில் விருப்பம் இருக்கவில்லையெனத் தெரிவிக்கும் அஞ்சலா தங்களது வீட்டில் சொந்த பஸ் இருப்பதால் அத்தொழிலை தெரிந்து வைத்திருந்தால் எதிர்காலத்தில் ஒரு பெண்ணாக இந்த சமூதாயத்தில் முகம் கொடுக்க முடியுமென்ற காரணத்தினால் இத்தொழிலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கின்றார். அந்த கருத்தியலில் தான் பேரூந்து ஓட்டுனராக எனது தொழிலை ஆரம்பித்ததாகத் தெரிவிக்கின்றார். இவரின் துணிச்சலும் நேர்மையையும் இவரை அரசியலுக்கு பிரவேச காரணமாக அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்பொழுது உள்ளுராட்சி மன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார். தற்பொழுது இவர் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முதலில் அரசியலில் விருப்பம் இருக்கவில்லை எனக்கூறும் இவர் பெண்களின் பிரச்சினைகளை கதைக்க பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை வலியுறுத்துகிறார். பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாத காரணங்களினால் பெண்களின் பிரச்சினைகள் சரியான முறையில் கதைக்கப்படுவதில்லை என்றும் தற்பொழுது பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கின்றார். அத்தோடு அஞ்சலா உதவும் உறவுகள் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தை நிறுவி மக்களுக்கு சேவை செய்வதோடு அரசியலில் ஈடுபடுவதன் காரணமாகவும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருவதாகத் தெரிவிக்கின்றார். தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவதை விரும்புவதாகத் தெரிவிக்கின்றார் அஞ்சலா.

குறிப்பு : மேற்படி பதிவு அஞ்சலா, கோகுலகுமார் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.