ஆளுமை:அனுதர்ஷி, லிங்கநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அனுதர்ஷி
தந்தை லிங்கநாதன்
தாய் சிவனேஸ்வரி
பிறப்பு 1990.04.26
ஊர் வவுனியா, ஓமந்தை கோவில்குஞ்சுக்குளம்
வகை ஊடகவியலாளர், கல்வியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அனுதர்ஷி, கபிலன் (1990.04.26) வவுனியா மாவட்டத்தில் ஓமந்தையில் அமைந்துள்ள கோவில்குஞ்சுக்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பொன்னையா லிங்கநாதன், தாய் சிவனேஸ்வரி. இவருக்கு அனோஜன், அஜந்தன், அனுசன் என மூன்று சகோதர்கள்.

கோவில்குஞ்சுக்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மற்றும் ஓமந்தை மத்திய கல்லூரியில் தரம் 7 வரை கல்வி கற்றார். தரம் 8 மற்றும் தரம் 9 யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திலும் பின்னர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லலூரியில் உயர்தரம் வரை கல்விகற்று பல்கலைக்கழககத்திற்குத் தெரிவானார். ஊடகத்துறை மீதுள்ள ஈடுபாடுகாரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் 2010 இல் இணைந்து 2015 ஆம் ஆண்டு தொடர்பாடல் கற்கைகளில் சிறப்புப் பட்டம் பெற்றார்.

2015 இல் இருந்து ஊடகவியலாளராக பல்வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்குப்பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் உதவி விரிவுரையாளராக இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணையும் வரை அங்கு பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடகக் கற்கைகள் விரிவுரையாளராக யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இணைந்தார்.

இவரது முதலாவது நூல் ஊடகத்துறையில் பணியாற்றியபோது போது மேற்கொள்ளப்பட்ட அரசியல் நேர்காணல்களை உள்ளடக்கி இலங்கை அரசியல் அரசியல்வாதிகள் எனும் தலைப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவரது இரண்டாவது கட்டுரைத் தொகுதி நோதலும் தணிதலும் எனும் தலைப்பில் வெளிவந்தது.

2019 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தில் வெகுஜன ஊடகத்தில் முதுமாணி பட்டக் கற்கைகளுக்காக இணைந்தார். விரிவுரையாளராக மட்டுமல்லாது சுயாதீன ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார். பால்நிலை சமந்துவம், சமூகப்பிரச்சினைகள், சமூக ஊடகம் மற்றும் மாற்றுஊடகம் போன்ற விடயங்களில் ஆய்வுகளை ஈடுபாட்டுடன் மேற்கொண்டுவருகிறார்.

விருதுகள்

2017 ஆம் சிறந்த ஆளுமைக்கான பூவரசி விருது.


குறிப்பு : மேற்படி பதிவு அனுதர்ஷி, கபிலன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.