ஆளுமை:அனுஷியா, சேனாதிராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அனுஷியா
தந்தை சேனாதிராஜா
தாய் புவனேஸ்வரி
பிறப்பு 1962.08.16
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர், கல்வியாளர்

அனுஷியா, சேனாதிராஜா (1962.08.16) யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சேனாதிராஜா; தாய் புவனேஸ்வரி. தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை காரைநகர் யாழ்டன் கல்லூரியில் கற்றார். மெட்ராஸ் பல்கலைக்கழக இளம்கலைமாணிப் பட்டத்தையும் பச்சையப்பா பல்கலைக்கழத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முது தத்துவமாணிப் பட்டதையும் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார் அனுஷியா. 1998 – 2000 ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். 2001ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழத்தின் வரலாற்றுத்துறை வருகை தரும் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார். வரலாறு, கல்வி, பெண்கள் சார்ந்த கல்வி வளர்ச்சி, பால்நிலை தொடர்பான கட்டுரைகள், மாநாட்டு கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் கட்டுரைகள் பெண், நிவேதினி ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. வரலாற்று நூல்களுக்கு அணிந்துரையும் ஆய்வுரையும் இவர் வழங்கியுள்ளார்.


குறிப்பு : மேற்படி பதிவு அனுஷியா, சேனாதிராஜா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.