ஆளுமை:அனோஜன், பாலகிருஷ்ணன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அனோஜன்
தந்தை பாலகிருஷ்ணன்
தாய் சுரேந்தினி
பிறப்பு 1992.07.30
ஊர் அரியாலை
வகை எழுத்தாளர், விமர்சகர், இலக்கியச் செயற்பாட்டாளர்

அனோஜன், பாலகிருஷ்ணன் (1992.07.30 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், விமர்சகர், இலக்கியச் செயற்பாட்டாளர். இவரது தந்தை பாலகிருஷ்ணன்; தாய் சுரேந்தினி. இவர் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்று மின்னியல் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை படித்தவர். Northshore College of business and technology இலும் கல்வி கற்றார்.

இவரது சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் ஆக்காட்டி, புதிய சொல், ஜீவநதி, கல்குதிரை, சிலேட், அம்ருதா, புதுவிசை, எதுவரை, மலைகள், சிறகு, நடு ஆகிய சஞ்சிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பான “சதைகள்” 2016 இல் வெளியாகியது. இவர் 'புதிய சொல்' இதழ் வெளியீட்டிலும் பங்களித்துள்ளார்.