ஆளுமை:அம்மன்கிளி, முருகதாஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்மன்கிளி
தந்தை கைலாயநாதன்
தாய் கைலாயநாதம்மாள்
பிறப்பு 1956.08.26
ஊர் யாழ்ப்பாணம்
வகை பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்மன்கிளி (1956.08.26) யாழ்ப்பாணம், வல்வெட்டிதுறையில் பிறந்தவர். இவரது தந்தை கைலாயநாதன்; தாய் கைலாயநாதம்மாள். யாழ் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை, யாழ் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப்பாடமாகப் பயின்று தனது இளங்கலை, முதுகலை கலாநிதி பட்டங்களை பெற்றவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறையில் தமிழ் முதுநிலை விரிவுரையாளராகவும், முதுகலைப்பட்ட இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். சங்க இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், பெண்ணிய விமர்சனம், நாடக இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். இத்துறை சார்ந்த பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் "Drama in Ancient Tamil Society" என்ற ஆங்கில நூலை "பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்" என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். மட்டக்களப்பில் இயங்கும் ”சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலைய”த்தினால் வெளியிடப்படும் சஞ்சிகையான பெண் சஞ்சிகைக்கு இவர் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இலங்கையில் இருந்து வெளிவரும் நிவேதினி பால்நிலை கற்கை நெறி சஞ்சிகை உட்பட பல சஞ்சிகைகளுக்கு பெண்ணியம் தொடர்பான பல கட்டுரைகளை பேராசிரியர் அம்மன்கிளி முருதாஸ் எழுதியுள்ளார்.

விருது பேராசிரியர் கா.சிவத்தம்பியின் "Drama in Ancient Tamil Society" என்ற ஆங்கில நூலை "பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்" என்னும் தலைப்பில் மொழிப்பெயர்ப்பு செய்தமைக்காக பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸிற்கு தமிழ்நாடு மாநில அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகையில் விருது வழங்கப்பட்டிருக்கிறது.


படைப்புகள்

  • சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும்
  • ஈழத்து தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம்
  • சங்கக் கவிதையாக்கம் - மரபும் மாற்றமும்

வளங்கள்

  • நூலக எண்: 3240 பக்கங்கள் 10-14
  • நூலக எண்: 928 பக்கங்கள் 13-21
  • நூலக எண்: 758 பக்கங்கள் 35-39
  • நூலக எண்: 758 பக்கங்கள் 35-39

வெளி இணைப்புக்கள்